வாழ்க்கை அனுபவங்களை நாவலாக வெளியிட்ட பிரபல எழுத்தாளர்!!

0
142
#image_title

வாழ்க்கை அனுபவங்களை நாவலாக வெளியிட்ட பிரபல எழுத்தாளர்!!

எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார், நிறைய திரைப்படங்களிலும் வசனங்கள் எழுதி உள்ளார் ‘சண்டக்கோழி’ படத்தில் இவர் எழுதிய பெண்கள் குறித்தான வசனத்திறகு பெண்கள் கண்டனம் தெரிவித்த சம்பவமும் நடந்தது.

புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் என பல எழுத்துப் பணிகளை அவர் தொடர்ந்து கொண்டிருக்கிறார். “சஞ்சாரம்” என்னும் இவருடைய படைப்புக்கு 2018ஆம் ஆண்டு சாகித்திய அகதெமி விருது இவருக்கு வழங்கப்பெற்றது. மேலும், தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த நாவல் விருது, நாள். விருது என எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார். மேலும் பல இலக்கிய மேடைகளில் தமிழ் இலக்கியம் குறித்தும், தமிழ்மொழி வரலாறு, தமிழர்களின் வரலாறு குறித்தும் பேசியுள்ளார்.

இவர் தனது எழுத்துப் பயணம் குறித்து, “எழுத்தே வாழ்க்கை” என்னும் தலைப்பில் புத்தகமாக தன்னுடைய அனுபவங்களை பதிவிட்டுள்ளார்.

தனது வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் தான் சென்ற பயணங்கள், பழகிய மனிதர்கள், தனது எண்ண ஓட்டங்கள், தனது எழுத்தாளப் பாதையில் நேர்கொண்ட தடைகள், அவற்றை தகர்த்தெறிய எடுத்துக்கொண்ட முயற்சிகள், அதற்கு உதவிய மனிதர்கள் என்று முன்னூற்று அறுபது கோணத்திலும் ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார். புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயங்களும் சிக்ஸராக அடித்து விளாசி இருக்கிறார்.

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் செயல்கள், எண்ணங்கள், பயணங்கள், மக்கள் மீதான கணிப்பு/ மரியாதை போன்ற பல்வேறு விஷயங்கள் உண்டு. அது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டது இந்தப் புத்தகம் வாயிலாக.

எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் சினிமாவில் கதை சர்ச்சையிலும் சிக்கியுள்ளார், அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தியின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் “அயோத்தி”. இப்படத்திற்கான கதையை பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். ஆனால் இந்த படத்தின் கதை மீதான உரிமை குறித்து தற்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

எழுத்தாளர் மாதவராஜ் இந்த படத்தினுடைய கதை எஸ்.ரா எழுதியது அல்ல என்பதற்கான ஆதாரங்களை தங்களது முகநூல் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் எஸ்.ராமாகிருஷ்ணன் இது தன்னுடைய கதைதான் என கூறினார். இதையடுத்து பிரச்சனையை படக்குழுவினர் சுமுகமாக பேசி முடித்து வைத்தனர் குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K