பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கள்ளச்சாரயம் விவகாரம்! இந்த எண்களுக்கு  புகார்களை அறிவிக்கலாம்!!

Photo of author

By Sakthi

பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கள்ளச்சாரயம் விவகாரம்! இந்த எண்களுக்கு  புகார்களை அறிவிக்கலாம்!
தமிழ் நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கள்ளச்சாரயம் விவகாரம் குறித்து தகவல்கள் தெரிவிக்க புகார் எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம் பகுதியை சேர்ந்த சிலர் கள்ளச்சாரயம் குடித்து வயிற்று வலி, வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சிகிச்சை பலன் இன்றி 13 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து உயிரிழந்தோர்களின் குடும்பத்திற்கு நிவாரணமும் அறிவித்தார்.
இதையடுத்து கள்ளச்சாரயம் குறித்து புகார்களை தெரிவிக்க தமிழக அரசு புகார் எண்களை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் 9445463494, 9498111155 என்ற எண்களுக்கு புகார்களை அறிவிக்கலாம் எனவும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கள்ளச்சாராயம் குறித்த புகார்களை 6379904848 என்ற எண்ணிற்கும் புகார்களை அறிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.