தற்கொலை வீடியோ வெளியிட்ட விவகாரம்!!! நடிகை விஜயலட்சுமி மீது புகார் அளித்த நாம் தமிழர் கட்சியினர்!!!

தற்கொலை வீடியோ வெளியிட்ட விவகாரம்!!! நடிகை விஜயலட்சுமி மீது புகார் அளித்த நாம் தமிழர் கட்சியினர்!!!

சமீபத்தில் தற்கொலை வீடியோ வெளியிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது குற்றச்சாட்டு வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை விஜயலட்சுமி அவர்களின் மீது நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை விஜயலட்சுமி அவர்கள் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களின் மீது பாலியல் புகார் அளித்தார். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதையடுத்து நடிகை விஜயலட்சுமி அவர்கள் சமீபத்தில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தனது தற்கொலைக்கு சீமான் அவர்கள் தான் காரணம் என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில் குமார் அவர்கள் வளசரவாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி அவர்களின் மீது புகார் அளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் அவர்கள் அளித்த புகாரில் “இப்பொழுது பெங்களூரில் வசித்து வரும் நடிகை விஜயலட்சுமி அவர்கள் எங்கள் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது 2011ம் ஆண்டு பொய்யான குற்றச்சாட்டுடன் புகார் ஒன்று அளித்தார். பின்னர் அந்த வழக்கை 2012ம் ஆண்டு திரும்ப வாபஸ் வாங்கினார்.

இதையடுத்து நாம் தமிழர் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கும் எதிராக பல எதிர் கட்சிகள் உள்ளது. இந்த கட்சிகள் அனைத்தும் நடிகை விஜயலட்சுமி அவர்களுக்கு தேவையான உதவியை செய்து தற்பொழுது மீண்டும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை வைத்து காவல் ஆணையரிடம் மற்றொரு புகாரை அளிக்க வைத்துள்ளனர். இதனால் நடிகை விஜயலட்சுமி அவர்கள் கடந்த மாதம் சீமான் அவர்களின் மீது புகார் ஒன்று அளித்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாகவும் சீமான் அவர்களிடம் இருந்து பணம் பறிக்க வேண்டும் என்பதற்காகவும் நடிகை விஜயலட்சுமி அவர்கள் செயல்பட்டு வந்தார். ஆனால் அந்த திட்டம் நிறைவேறாமல் சென்றதால் நடிகை விஜயலட்சுமி அவர்கள் புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டு மீண்டும் பெங்களூருக்கு சென்று விட்டார்.

இது தொடர்பான வழக்கு உயர்நீதி மன்றத்தில் நடந்து வருகின்றது. இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி அவர்கள் தானும் தன் அக்காவும் உணவு தண்ணீர் அருந்தாமல் உயிரை மாய்த்துக் கள்ளப் போவதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்கும் சீமான் அவர்கள் தான் காரணம் என்று மிரட்டல் விடுத்துள்ளார். கர்நாடகா மாநிலத்திலும் தமிழகத்திலும் பல பேர் மீது நடிகை விஜயலட்சுமி அவர்கள் குற்றச்சாட்டுகள் வைத்திருந்தார். மேலும் ஏற்கனவே ஒருமுறை தற்கொலைக்கு முயன்றார்.

தற்பொழுது பொய்யான புகார்களை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்களின் மீது வைத்து தானும் தனது அக்காவும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக நடிகை விஜயலட்சுமி அவர்கள் நாம் தமிழர் கட்சியினரையும் தலைவர் சீமான் அவர்களையும் மிரட்டி வருகிறார். எனவே விஜயலட்சுமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.