தொலைக்காட்சி அலுவலகத்தில் பட்டாக்கத்தியுடன் நுழைந்த நபர்!! கொலை மிரட்டலால் அதிர்ந்த அலுவலர்கள்!!

Photo of author

By Jayachithra

தொலைக்காட்சி அலுவலகத்தில் பட்டாக்கத்தியுடன் நுழைந்த நபர்!! கொலை மிரட்டலால் அதிர்ந்த அலுவலர்கள்!!

சென்னை சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தில் பட்டாக்கத்தியுடன் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம நபர் ஒருவர், மாலை 7 மணியளவில் கையில் ஒரு கிட்டார் பேக்குடன் அலுவலகத்தில் சென்றார். அத்துடன் அலுவலக ஊழியர்கள் கேட்டபோது, அலுவல் ரீதியாக வந்ததாக அவர் கூறியிருக்கின்றார். அலுவலக விருந்தினர் என்று நினைத்தவர்கள் அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

வரவேற்பறைக்கு சென்று அந்த மர்ம நபர் தனது கையிலிருந்த கிட்டார் பேக்கை திறந்து அதனுள் இருந்த பெரிய பட்டாக்கத்தி மற்றும் கேடயத்தை எடுத்தார். அத்துடன் வரவேற்பறையில் இருந்த கண்ணாடி, மேஜை மற்றும் டிவி, இருக்கைகள், கதவு என்று அங்கு இருந்து அனைத்து பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.

மேலும், அலுவலக ஊழியரை கொலை செய்வதாக மிரட்டியவர், வரவேற்பறையில் இருந்த அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளார். இதனை அடுத்து உடனடியாக அலுவலர்கள் ராமபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

காவலர்கள் விரைந்து வந்து அந்த மர்ம நபரை பிடித்து அவரிடம் உள்ள பட்டா கத்தி மற்றும் கேடயம், குஜராத் பதிவெண் கொண்ட ஷிப்ட் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தாக்குதலில் ஏற்பட்ட அந்த மர்மநபர் கோவையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பது தெரியவந்தது. இவர் சில தினங்களுக்கு முன் குஜராத்தில் இருக்கும் தனது சகோதரரை சந்திப்பதாக சென்று உள்ளார்.

அங்கே ஆன்லைனில் கத்தி மற்றும் கேடயம் போன்றவற்றை ஆர்டர் செய்து அவற்றை வாங்கிக் கொண்டு காரை எடுத்து நேரடியாக சென்னை வந்து சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு தாக்குதல் நடத்தியது தெரிய வந்திருக்கின்றது.

இந்த சம்பவம் குறித்து மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் தான் அந்த மர்ம நபர் எதற்காக சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு சென்று தாக்குதலில் ஈடுபட்டார் என்பது தெரியும்.