அமெரிக்கா – சீனா இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

அமெரிக்க-சீன உயர் அதிகாரிகள் முதல் கட்டப் பொருளியல் உடன்படிக்கைக்குப் பிறகும் அடுத்தகட்ட பேரப்பேச்சைத் தொடர, இணக்கம் கண்டுள்ளனர். இருநாட்டு அதிகாரிகளும் தொலைபேசி வழி கலந்துரையாடினர். இருதரப்புக்குமிடையே சில விவகாரங்களின் தொடர்பில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அண்மைத் தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்காவும், சீனாவும் இந்த ஆண்டு ஜனவரியில் முதல்கட்ட உடன்பாட்டைச் செய்துகொண்டன.

அதன்கீழ், பெய்ச்சிங் அடுத்த ஈராண்டுக்கு 200 பில்லியன் டாலர் மதிப்புமிக்க அமெரிக்கப் பொருள்களை இறக்குமதி செய்யவேண்டும். கார்கள், இயந்திரங்கள், எண்ணெய், வேளாண்-பொருள்கள் போன்றவை அவற்றில் அடங்கும். ஆனால், கிருமிப்பரவல் சூழலில் சீனா அத்தகைய பொருள்களைக் குறைவாகவே வாங்குகிறது. உடன்பாடு தொடர்பில் இருதரப்பும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், ஒப்பந்தம் வெற்றிபெறுவதை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வாஷிங்டனும், பெய்ச்சிங்கும் தெரிவித்துள்ளன.

Leave a Comment