சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதிகட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் நடந்து வந்தாலும் மருத்துவத் துறையினரின் சிறப்பான சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 98 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 77 லட்சத்து 20 ஆயிரத்து 836 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.