இரண்டு கோடியை நெருங்கி வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

0
148

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512  பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 58 லட்சத்து 89 ஆயிரத்து 823 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 84 லட்சத்தை கடந்துள்ளது.

Previous articleகிறிஸ் எவர்ட்டின் சாதனையை முறியடித்த இந்த வீராங்கனை
Next articleஅமெரிக்க அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் நடக்க போகும் முக்கிய நிகழ்வு