மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மாவட்டங்களில்  பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை! 

0
237
The order issued by the District Collector! Which districts have school and college holidays!
The order issued by the District Collector! Which districts have school and college holidays!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மாவட்டங்களில்  பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்.

வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் கரையை நோக்கி மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்தது.

அதனை தொடர்ந்து சென்னைக்கு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி -ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நள்ளிரவு 2.30 மணியளவில் மாண்டஸ் புயல் கரையை கடந்தது.

அதன்பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்தது.அதனால் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இரவு முதலே கனமழை பெய்து வருவதால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அந்த உத்தரவில் சென்னை ,திருவள்ளூவர்,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம்,வேலூர், ராணிப்பேட்டை ,திருவண்ணாமலை ,விழுப்புரம், கள்ளக்குறிச்சி,கடலூர்,சேலம்,தர்மபுரி ,நீலகிரி, திருப்பத்தூர்,திண்டுக்கல், கொடைக்கானல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

Previous articleகர்ப்பமான பெண்கள் கவனத்திற்கு! உங்கள் உணவில் இது எல்லாம் உள்ளதா? செக் பண்ணிக்கோங்க!!
Next articleவனத்துறை தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு! தமிழ்நாடு தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!