பெற்றோர் படிக்க சொன்னதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு?

பெற்றோர் படிக்க சொன்னதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு?

சென்னையை அடுத்த பழைய பல்லவரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் தான் முனீஸ்வரன். இவர் மெக்கானிக் ஷாப் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி. இவர் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள்.

இவளுடைய மகன் சிவசக்தி அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். சிவசக்திக்கு  விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருந்தது.இதனால் தன் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் விளையாட்டுக்காக அடிக்கடி வெளியில் சென்று வந்துள்ளார்.

விளையாட்டில் ஆர்வம் காட்டிய இவர் பல பரிசுகளையும் பெற்று வந்துள்ளார். இதே போல் வழக்கமாக விளையாட்டிற்கு சென்று விட்டு மீண்டும்  வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிலிருந்த பெற்றோர்கள் சிவசக்தியை அழைத்து படிக்காமல் இப்படி விளையாட சென்று விட்டு வருகிறாயே என்று அவரது பெற்றோர் கண்டித்துள்ளார்கள்.

மேலும் சில கொச்சை வார்த்தைகளை கூறி சிவசக்தியை திட்டி உள்ளார்கள்.இதனால்  மனம் உடைந்த சிவசக்தி வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்நிலையில் வெளியில் சென்றிருந்த  சிவ சக்தியின் தாய் கதவை தட்டியுள்ளார். வெகு நேரம் ஆகியும் மறு குரலும் வராததை கண்ட லட்சுமி ஜன்னல் வழியாக பார்த்தார்.

அப்போது சிவசக்தி தூக்கில் பிணமாக தோன்றியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் காவல் துறையினருக்கு  தகவல் கொடுத்தனர். மேலும் பல்லாவரம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவசக்தி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment