திண்டாடும் ஏழைகள்!

Photo of author

By Savitha

திண்டாடும் ஏழைகள்!

Savitha

திண்டாடும் ஏழைகள்!

தமிழகத்தில் உள்ள பல்லாயிர கணக்கான ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் கிடைக்கும் இலவச மற்றும் மலிவு விலை பொருட்களை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றன.

அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடி விற்பது மற்றும் பதுக்கி வைக்கும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகமாக நடைப்பெற்று வருகிறது.

இதனால் ரேஷன் பொருட்கள் ஏழை மக்களை முறையாக சென்றடையாமல் மக்கள் திண்டாடுகின்றனர்.

இதனை தடுக்க தமிழக அரசு சிறப்பு நடவடிக்கையாக ரேஷன் பொருட்களை கடத்துவோர் மற்றும் பதுக்குவோர் மீது 1800 599 5950 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என அறிவித்தது.

இதனடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் மட்டுமே 835 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.