சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு!!

0
164

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு!!

சென்னை, 1 கிராம் தங்கம் ரூ.5000 கும் கீழ் விற்கப்பட்டு வந்த நிலையில்,கடந்த மார்ச் மாதம் முதல் இதன் விலை அதிகரித்து காணப்படுகிறது.மேலும் இதன் விலை அதிரடியாக உயர்வது, மறுநாள் பெயரளவுக்கு குறைவது என்று வாடிக்கையாக உள்ளது. மேலும் தொடர்ந்து தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து 1 சவரன் ரூ.46,000 ஆகவும் விற்பனையானது. தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனையை படைத்தது. பின்னர் கடந்த மாதம் சற்று விலை வீழ்ச்சி ஏற்பட்ட நிலையில் பிறகு ஏற்றம் கண்டு விட்டது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வெள்ளிக்கிழமை)சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,550க்கும், சவரன் ரூ.44,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் 1 கிராம் 6017 என்றும் 8 கிராம் 48,136-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகின்றது.
இதனை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.2.00காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.50க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Previous articleஅண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்! புறக்கணிப்பு செய்த தேமுதிக பொருளாளர்!!
Next articleபக்தர்களே தயாரா!! உங்களுக்கான பயணத்தை எளிதாக்க புதிய வசதி!!