பிளஸ் 1 மாணவனை இழுத்து ஓடிசென்ற பள்ளி ஆசிரியை!..போலீசாருக்கு புகார் கொடுத்த பெற்றோர்கள்?
திருச்சி மாவட்டம் துறையூரில் ஒரு தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் சிக்கத்தம்பூரைச் சேர்ந்தவர் தான் சர்மிளா ஆசிரியை.இவருடைய வயது 26. அதே ஊரை சேர்ந்த மாணவன் ஒருவன் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
கடந்த வாரம் பள்ளி ஆசிரியை மற்றும் அந்த மாணவன் இருவரும் காணாமல் போனார்கள்.இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளி மாணவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தன் மகனை விரைவில் மீட்டு தருமாறு கண்ணீர் விட்டு கதறினார்கள்.பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.இந்நிலையில் அந்த பள்ளி மாணவனை தான் வகுப்பு ஆசிரியை தன்னுடன் அழைத்து சென்றது வெளிச்சத்திற்கு வந்தது.
அதன் அடிப்படையில் பள்ளி மாணவன் மற்றும் ஆசிரியை எங்கு இருக்கிறார் என அவர்களது செல்போன் எண்ணை வைத்து போலீசார்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுவந்துள்ளார்கள் .அப்போது இருவரும் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர்ஆகிய பல்வேறு ஊர்களுக்கு சுற்றி திரிந்து வருவது தெரிய வந்தது.
இதனை அறிந்த போலீசார்கள் எடமலைப்பட்டிபுதூருக்கு விரைந்து சென்று அங்கு தோழியின் வீட்டில் தங்கிருந்த சர்மிளா மற்றும் பள்ளி மாணவனை மீட்டனர்.பின் அவர்கள் இருவரையும் துறையூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்க தொடங்கினார்கள்.இந்த விசாரணையில் இருவரும் தஞ்சை பெரிய கோவிலில் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.
பின் இருவரும் தோழியின் வீட்டில் தஞ்சம் அடைந்தது தெரிந்தது.மேலும் திருமண வயதை அடையாத பள்ளி மாணவனை திருமணம் செய்த சர்மிளா மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த ஆசிரியை கைது செய்தார்கள் .பின்னர் அவரை திருச்சி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதன்படிஅவருடன் சென்றிருந்த பள்ளி மாணவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.மாணவருக்கு கல்வி கற்று தரும் ஆசிரியர்களே அழைத்து சென்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.