இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மாலை தொடங்குகிறது

0
154

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது.

நேற்று முன்தினம் முதல் ஒருநாள் போட்டி நடந்தது. இதில் இங்கிலாந்து அணி 173 ரன் இலக்கை மிக சுலபமாக 27.5 ஓவரில் 4 விக்கெட் இழந்து வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று மாலை 6.30  மணிக்கு தொடங்குகிறது. இரு அணிவீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

Previous articleசிறுமி தற்கொலை: அதிர்ச்சியில் பெற்றோர்!
Next articleவிவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 21 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டல்!!