ஓடும் பேருந்தில் நடந்த அதிர்ச்சி?பேருந்து பயணிகள் அலார்ட்!..

0
180
The shock that happened in the running bus? Bus passengers alert!..
The shock that happened in the running bus? Bus passengers alert!..

ஓடும் பேருந்தில் நடந்த அதிர்ச்சி?பேருந்து பயணிகள் அலார்ட்!..

தஞ்சை மாவட்டம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தான்  சுப்ரமணியன்.இவருடைய மனைவி அந்தோணியம்மாள் வயது 52. இவர் தஞ்சையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.சம்பவத்தன்று இவர் தஞ்சை புது ஆற்றுப்பாலம் அருகேவுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்தில் ஏறினார்.

பின்னர் இவர் ஒரு மருத்துவமனையின் அருகே பேருந்து நிறுத்தத்தில் கீழே இறங்கிவுள்ளார்.அப்போது அவர் தனது கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே அவர் மீண்டும் பேருந்தில் ஏறி அங்கிருந்த பலரிடம் விசாரித்து பார்த்தும் நகைகள் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

பேருந்தில் இருந்த அனைவரும் நான் பார்க்கவில்லை என்று கூறியதை கேட்ட அவர் அலறி அடித்து கொண்டு போலீசாருக்கு தகவல் கொடுக்க சென்றார்.இதனை கண்ட பேருந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்து தங்களின் நகைகளை பத்திரப்படுத்தி கொண்டிருந்தனர்.இந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ சிலர் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று இருக்கலாம் என கூறியிருந்தார்கள்.இதுகுறித்து இங்குள்ள காவல் துறையினர் அந்தோணியம்மாள் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.ஓடும் பேருந்தில் கை வரிசை காட்டிய திருடர்கள்.இச்சம்பவம் பேருந்து பயணிகளுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Previous articleரோஹித்- கோலி செய்தது தவறு… முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கண்டனம்!
Next article ஆர்.டி.ஓ  அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்! விநாயகர் சிலை வைப்பதற்கு தடையா?