நெல்லையில் மாமனாரை வெட்டிய மருமகன்… சிகிச்சை பெற்று வந்த மாமனார் உயிரிழப்பு!!

0
124

 

நெல்லையில் மாமனாரை வெட்டிய மருமகன்… சிகிச்சை பெற்று வந்த மாமனார் உயிரிழப்பு…

 

நெல்லை மாவட்டத்தில் மாமனாரை மருமகன் வெட்டியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மாமனார் உயிரிழந்த நிலையில் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

 

நெல்லை மாவட்டம் வி

கே புரம் அருகே முதலியார் பட்டி உள்ளது. முதலியார் பட்டியில் உள்ள நடுத்தெரு என்ற பகுதயை சேர்ந்த முத்துக்குட்டி தனது மகளை அதே பகுதியை சேர்ந்த தர்மர் என்பவரின் மகன் ஆதிலெட்சுமணன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

 

திருமணமான ஆதி லெட்சுமணன் அவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். சம்பவம் நடந்த தினத்தில் முத்துக்குட்டி தனது பேரன் அதாவது ஆதி லெட்சுமணன் அவர்களுடைய மகனை கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். இதை அறியாத ஆதி லெட்சுமணன் தனது மகன் தொலைந்து போய்விட்டார் என்று எல்லா பக்கமும் தேடியுள்ளார். பின்னர் உண்மையை அறிந்த பின்னர் ஆதி லெட்சுமணன் அவர்கள் மாமனார் முத்துக் குட்டியிடம் வந்து கேட்டுள்ளார். அப்போது மாமனார் முத்துக் குட்டிக்கும் மருமகன் ஆதி லெட்சுமணன் அவர்களுக்கும் இடையே வாக்குவதாம் ஏற்பட்டுள்ளது.

 

இதில் ஆத்திரம் அடைந்த இருவரும் தகறாரில் ஈடுபட்டனர். பின்னர் இருவரும் மாறி மாறி அரிவாளால் வெட்டிக் கொண்டனர்.

 

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த முத்துக் குட்டி நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆதி லெட்சுமணன் ஈவர்கள் அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து நெல்லை விகே புரம் காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துக்குட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

Previous articleநார்வேயில் பைக் ரைடு மேற்கொண்டுள்ள அஜித்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!
Next articleசிவகார்த்திகேயனின் மாவீரன், அசோக் செல்வனின் போர்தொழில்… இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் வெளியானது!!