பணத்திற்காக தந்தையிடம் நாடகமாடிய மகன்!!

Photo of author

By Parthipan K

பணத்திற்காக தந்தையிடம் நாடகமாடிய மகன்!!

Parthipan K

சென்னையை சேர்ந்த சிறுவன் ஒருவன் ,தான் கடத்தப்பட்டதாக கூறி தந்தையிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன்,டியூஷன் வகுப்புக்கு சென்றபோது மாயமாகியுள்ளான். சில நேரம் கழித்து சிறுவனின் தந்தை செல்போன்க்கு கால் வந்தது. அதில் உங்கள் குழந்தையை கடத்தி வைத்துக் திருப்பதாகவும், 10 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் சிறுவனை விடுவோம் என்று கூறியுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த தந்தை அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.புகாரின் பெயரில் தேடுதலை வேட்டையை தொடங்கிய காவல்துறையினர், அச்சிறுவன் சென்ற டியூஷன் செல்லும் பாதையில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்தனர்.

அதில் முதற்கட்டமாக அந்தச் சிறுவனை யாரும் கடத்தவில்லை என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தினார்.மேலும், மிரட்டல் கால் வந்து எண்ணை காவல்துறையினர் ட்ரெஸ் செய்ததில், சிறுவனே மற்றொரு நபர்களுடன் சேர்ந்து தனது தந்தையிடம் பணம் பறிப்பதற்காக நாடகமாடியது தெரியவந்தது.

இந்த சம்பவம் தந்தைக்கும், காவல்துறையினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.