கட்டில் கடையில் குளிர்பானங்களை வாங்கி சாப்பிட்டதால் மயக்கம் அடைந்த மாணவி! பரபரப்பு சம்பவம்!

Photo of author

By CineDesk

கட்டில் கடையில் குளிர்பானங்களை வாங்கி சாப்பிட்டதால் மயக்கம் அடைந்த மாணவி! பரபரப்பு சம்பவம்!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி மேட்டு தெரு அடுத்த அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. அங்கு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 1200க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மேலும் கேட்டு கடை பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி நதியா பள்ளியின் முன்பு உள்ள கடையில் இரண்டு ரூபாய் குளிர்பான பாக்கெட்டை வாங்கி சாப்பிட்டுள்ளார்.அப்போது மாணவி சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

இதுகுறித்து சக தோழிகள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து நதியவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் மேல் சிகிச்சைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது பள்ளி மாணவி நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.