ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற மத்திய அரசு திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது !! பதில் மனுவில் அறிவிப்பு !!

Photo of author

By Parthipan K

நாடு முழுவதும் ஒரே பதவி ஒரே அங்கீகாரம் திட்டம் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவை திருத்தும் செய்ய உச்ச நீதிமன்றத்தில் ஆணை பிறப்பித்திருந்த நிலையில், இந்தப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ,முதல்கட்டமாக ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தியது. இதில் ஓய்வூதியம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையை மாற்றி நடப்பு பிரச்சனைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு ராணுவ அமைச்சகத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒரே பணி செய்து ஓய்வு பெற்றவர்கள், அந்த வருடத்தில் எந்த மாதம் ஓய்வு பெற்றாலும், ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது என்றும், பொருளாதார சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த நடைமுறையை கொண்டு வந்துள்ளதாகவும் பதில் மனுவில் கூறியுள்ளது. மேலும் இதற்கு எந்தவித திருத்தமும் மேற்கொள்ள முடியாது என்றும் ,இந்த பிரச்சனைக்கு உச்சநீதிமன்றமும் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக  கூறியுள்ளது.