ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி!!  உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! 

0
355
#image_title

ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி!!  உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி. ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த விசாரித்தது.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் மார்ச் 28
ஒத்திவைத்தது.

ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் 45 மேல் முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில்

அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க வேண்டுமென செப்டம்பர் 22ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை காவல்துறை அமல்படுத்தி இருக்க வேண்டும் அல்லது மேல்முறையீடு செய்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதி வழங்காத காவ்ல்துறையின் செயலை நீதிமன்ற அவமதிப்பாகவே தான் கருத வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனடிப்படையில், ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கைகளை தனி நீதிபதி மேற்கொள்ளாமல், நவம்பர் 4ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்ததுடன், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்தது சட்டபபடி அனுமதிக்கத்தக்கதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பொது சாலைகளில் அணிவகுப்பு நடத்துவது என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள், இதுபோன்ற அணிவகுப்புகள், கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர, முழுமையாகத் தடை செய்ய முடியாது என்றும் காவல்துறைக்கு தெளிவுபடுத்தி உள்ளனர்.

புதிய உளவுத் தகவல்கள் என்ற பெயரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம்காட்டி ஒரு அமைப்பின் அடிப்படை உரிமையை மாநில அரசு தடை செய்ய முடியாது என்றும், சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

அந்த வகையில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பிற்கு தேவையான பாதுகாப்பை வழங்கி, அதன் அடிப்படை உரிமையை உறுதி செய்திருக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கொள்கைகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளதக்கதாக இருக்க வேண்டுமென அவசியம் இல்லை என்றும், மாற்றுக் கொள்கை கொண்ட அமைப்புகள் இருக்கின்றன என்பதற்காக ஒரு அமைப்பின் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்க முடியாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

அரசின் முடிவு, பொது நலன் அடிப்படையில் இருக்க வேண்டுமென தவிர, கொள்கை, அரசியல் சார்பு அடிப்படையில் இருக்கக் கூடாது என்றும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளான பேச்சு உரிமை மற்றும் கருத்து சுதந்தித்தை உறுதி செய்யும் வகையில் அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

மக்கள் நல அரசின் அணுகுமுறை என்பது குடிமக்களின் உரிமைக்கு எதிராக இருக்கக்கூடாது என்றும், ஆரோக்கியமான ஜனநாயகத்தை பேண, அமைதியான முறையில் பேரணி, அணிவகுப்பு, பொதுக்கூட்டம், போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த வேண்டுமென்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், அனுமதி அளிக்க வேண்டுமென கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

முன்று தேதிகளை குறிப்பிட்டு அணிவகுப்புக்கு அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பிக்கும்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த மூன்று தேதிகளில், ஒரு தேதியில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கும்படி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஒழுக்கத்தை கடைப்பிடித்து அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்றும், பிறரை தூண்டும் வகையில் பேரணி நடத்தக்கூடாது என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு உத்தரவிட்டுள்ளனர்.

அமைதியான முறையில் அணிவகுப்பு பேரணி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கும் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு அரசின் உள்துறை செயலர் பனீந்தர ரெட்டி சார்பில் வழக்குரைஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

Previous articleபசுவின் கோமியத்தில் ஆபத்தான பாக்டீரியாக்கள் உள்ளது!! இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவல்!!
Next articleகொரோனாவுக்கு இனி அச்சப்பட தேவையில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்