கொரோனாவுக்கு இனி அச்சப்பட தேவையில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0
172
#image_title

கொரோனாவுக்கு இனி அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

புதிதாகப் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு இந்திய நாட்டில் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று பல்வேறு கட்டங்களை தாண்டி தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலையின் போது நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஊரடங்கை பிறப்பித்தார்.அதனைத் தொடர்ந்து சில மாதங்கள் ஊரடங்கும் தொடர்ந்தது அதன்பிறகு படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்திலும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.  பலரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலையைத் தாண்டி தற்போது கொரோனா நான்காம் அலை வந்துவிட்டதாக மருத்துவர்கள் சிலர் கூறுகின்றனர்.
தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கொஞ்சம், கொஞ்சமாக உயர்ந்து  வருகிறது. இன்று கூட புதுக்கோட்டையில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 சட்டமன்றத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள், தமிழகத்தில் தற்போது கொரோனா நான்காம் அலை உருவாகவில்லை என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது பரவி வரும் கொரோனா நோய்த் தொற்று அவ்வளவு வீரியம் இல்லை என்றும் இதனால் பாதிப்பு பெரிதாக இருக்காது என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாமும் நடத்தப்படும், கொரோனா தடுப்பூசிகளை அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நன்று என்றும் மா.சுப்பிரமணியம் அவர்கள் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
author avatar
Savitha