எஸ்.பி.ஐ மீதான இரண்டு வழக்கையும் இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!!

Photo of author

By Savitha

எஸ்.பி.ஐ மீதான இரண்டு வழக்கையும் இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!!

தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை வழங்க பாரத ஸ்டேட் வங்கி அவகாசம் கோரிய மனுவை இன்று விசாரக்கிறது உச்சநீதிமன்றம்.

அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கக்கூடிய தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவே இந்த திட்டம் செல்லாது என கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நிலையில்,இந்த திட்டத்தில் யார் யாருக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்ற முழு விவரத்தை மார்ச் 6 ஆம் தேதிக்குள் எஸ்.பி.ஐ வங்கி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

உச்சநீதி மன்றம் வழங்கிய அவகாசம் முடிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு விவரங்களை திரட்ட தாமதமாவதால் ஜுன் 30 ஆம் தேதி வரை கால அவகாசத்தை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

முடியுமேன்ற போதும் தகவலை வழங்காமல் தாமதம் செய்து உச்சநீதி மன்றத்தை அவமதிக்கிறது என எஸ்.பி.ஐ வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எனவே இந்த இரண்டு வழக்கு மீதும் இன்று காலை விசாரணை நடத்துகிறது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு.