புதிதாக வெளியிட்ட திட்டத்திற்கு ஊக்க தொகை வழங்காத தமிழக அரசு! இனியும் இந்த நிலை தொடருமா என கேள்வி?    

Photo of author

By Parthipan K

 

 

புதிதாக வெளியிட்ட திட்டத்திற்கு ஊக்க தொகை வழங்காத தமிழக அரசு! இனியும் இந்த நிலை தொடருமா என கேள்வி?

 

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் உள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.இந்நிலையில் பள்ளி , கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அதனால் மாணவர்கள் பாதிப்பு அடைவார்கள் என எண்ணி வீட்டில் இருதபடியே படிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் அனைவருக்கும் கற்பிக்கப்பட்டு வந்தது.அதனையடுத்து மாணவர்கள் கற்பிக்கும் திறனை மேம்படுத்த தன்னார்வலர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அவர்களின் இல்லம் தேடி சென்று கல்வி கற்பித்தல் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது.

அதனால் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கலுக்கு ஊக்கதொகையாக மாதம் ரூ1000 வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.இந்நிலையில் மே மாதத்தில் இருந்து அந்த ஊக்கதொகை ரூ 1000 வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.அதனால் அரசு அதனை தாமதப்படுத்தாமல் குறித்த நேரத்தில் ஊக்க தொகையை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.