டீ கடை “வாழைக்காய் பஜ்ஜி” இப்படி செய்தால் சீக்கிரம் காலியாகி விடும்!! இன்றே முயற்சி செய்து பாருங்கள்!!
நமக்கு பிடித்த எண்ணெய் பண்டங்களில் ஒன்று வாழைக்காய் பஜ்ஜி.நம் வீட்டு விசேஷங்களின் உணவு பட்டியலில் இந்த பஜ்ஜி முக்கிய இடத்தை பிடிக்கிறது.இந்த சுவையான காரமான பஜ்ஜியை டீ கடை சுவையில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
*மொந்தன் வாழைக்காய் – 2
*கடலை மாவு – 2 கப்
*அரிசி மாவு – 1 தேக்கரண்டி
*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
*சீரகம் – 1/2 தேக்கரண்டி
*பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
*கேசரி பவுடர் – 1/4 தேக்கரண்டி
*சோடா உப்பு – 1/4 தேக்கரண்டி
*எண்ணெய் – 1/4 லிட்டர்
செய்முறை:-
1)பஜ்ஜி செய்வதற்கு முதலில் இரண்டு வாழைக்காய் எடுத்துக் கொள்ளவும்.அதன் மேல் தோலை நீக்கி விடவும்.அடுத்து காய் சீவலை பயன்படுத்தி வாழைக்காயை மெல்லிய துண்டுகளாக சீவவும்.
2)அடுத்து ஒரு பாத்திரம் எடுத்து அதில் 2 கப் கடலை மாவு மற்றும் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
3)பிறகு ஒரு தேக்கரண்டி உப்பு,1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள்,1/2 தேக்கரண்டி சீரகம் மற்றும் 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
4)அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
5)பின்னர் 1/4 தேக்கரண்டி கேசரி பவுடர் மற்றும் 1/4 தேக்கரண்டி சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
6)அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 1/4 லிட்டர் எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் நன்றாக காய்ந்து வந்ததும் அதில் சீவி வைத்துள்ள வாழைக்காயை ஒவ்வொன்றாக எடுத்து தயார் செய்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் தடவி பின்னர் ஒவ்வொன்றாக எண்ணெயில் போட வேண்டும்.இருபுறமும் நன்கு வெந்து வந்ததும் அதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.