மூட்டு வலியை குறைக்கும் தங்க நிற பால்!!! இதை எப்படி செய்வது!!?

0
30
#image_title
மூட்டு வலியை குறைக்கும் தங்க நிற பால்!!! இதை எப்படி செய்வது!!?
நம்மில் அதிகம் பேருக்கு இருக்கும் அதிக பிரச்சனைகளில் ஒன்றான இந்த மூட்டுவலி பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தங்கநிறப் பால் என்பது தங்கத்தை வைத்து தயார் செய்வது கிடையாது. இது தங்க நிறமான மஞ்சள் நிறத்தில் இருக்கும் பால் ஆகும். இதன் தங்க நிறம் எதனால் வருகின்றது என்றால் இதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருள்களால் மட்டும் மட்டும்தான். இந்த தங்கநிறப் பாலை தயார். செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன இதை எப்படி தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
தங்கநிறப் பால் செய்ய தேவையான பொருட்கள்… 7
* மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
* பால் – ஒன்றரை(1 1/2) கப்
* பனங்கற்கண்டு – 1 ஸ்பூன்
தங்கநிறப் பாலை தயார் செய்யும் முறை…
அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் ஒன்றரை கப் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாலை நன்கு கொதித்த வைக்க வேண்டும்.
பின்னர் இதில் கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்கு கொதித்த வைக்க வேண்டும். இறுதியாக இதில் பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கரைய வைத்து விடலாம். இதே மூட்டுவலியை குறைக்கும் மருந்து தயாராகி விட்டது.
மஞ்சள் பொடி கலந்துள்ள இந்த தங்கநிறப் பாலை நாம் தினமும் குடித்து வந்தால் மூட்டு வலி என்பது குறைந்துவிடும். இந்த தங்கநிறப் பாலான மஞ்சள் பால் மூலமாக நமக்கு கிடைக்கும் மற்ற. நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தங்கநிறப் பாலின் நன்மைகள்…
மஞ்சள் கலந்த தங்கநிறப் பாலை குடிக்கும் பொழுது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. மஞ்சள் கலந்த தங்கநிறப் பாலை குடிக்கும் பொழுது நம்முடைய ஜீரணமண்டலம் மேம்படையும். மஞ்சளுடன் மிளகுப் பொடி சேர்த்து குடிக்கும் பொழுது இருமல் தொந்தரவு ஏற்படாது.