ஒரு கேஸ் சிலிண்டர் 60 நாட்கள் வரை வைத்து பயன்படுத்துவதும் டெக்னீக்!

0
350
#image_title

ஒரு கேஸ் சிலிண்டர் 60 நாட்கள் வரை வைத்து பயன்படுத்துவதும் டெக்னீக்!

தற்பொழுது அனைத்து பொருட்களும் விலை ஏற்றம் கண்டு விட்டது. அரிசி, பருப்பு, காய்கறி, சிலிண்டர் என்று சொல்லிக் கொண்ட போகலாம்.

வீட்டு சிலிண்டர் ரூ.1000த்தை தண்டி விட்டதால் கேஸ் அடுப்பில் சமைக்கவே இல்லத்தரசிகள் அஞ்சுகின்றனர். சிலிண்டர் விலை ஏற்றதால் சிலர் விறகு அடுப்பிற்கு மாறிவிட்ட நிலையில் சிலர் சிம்பிள் டிஸ் செய்து சாப்பிடும் சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டனர்.

ஒரு சிலிண்டர் வாங்கினால் அதை 30 நாட்கள் வரை கடத்தி செல்வதற்குள் நாக்கு தள்ளி விடுகிறது என்று சொல்லும் இல்லத்தரசிகளுக்கு தான் இந்த குட் நியூஸ்.

ஒரு கேஸ் சிலிண்டரை 60 முதல் 70 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தும் சிம்பிள் ட்ரிக்ஸ் பற்றி தான் சொல்லப்பட்டு இருக்கின்றது.

*கேஸ் உடனடியாக தீர்ந்து போக அடுப்பில் உள்ள பர்னரும் ஒரு காரணம் தான். பர்னரை அடிக்கடி சுத்தம் செய்து எந்த ஒரு அடைப்பும் இன்றி பயன்படுத்த வேண்டும்.

*அடுப்பில் அகலமான பாத்திரம் வைத்து சமைக்கத் தொடங்குங்கள். இவ்வாறு செய்வதினால் கேஸ் வேஸ்ட் ஆகாது. குறுகிய பாத்திரங்களை வைத்து சமைப்பதினால் தேவையில்லாமல் கேஸ் அதிகளவில் வெளியேறும்.

*பருப்பு வகைகளை சமைப்பதற்கு முன்னர் அதை சில மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அதை சமைக்க குறைவான நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளும். இதனால் கேஸ் மிச்சமாகும்.

*அரிசி சாதம், குழம்பு ஆகியவற்றை சமைக்கும் பொழுது மூடி வைத்து சமைத்தால் அவை விரைவில் வெந்து விடும். இதனால் நேரமும், கேஸும் மிச்சமாகும்.

*தண்ணீர், பால் சுட வைக்க கரண்ட் அடுப்பை பயன்படுத்துவது நல்லது.

*பாத்திரத்தின் உள் மற்றும் வெளிப்புறத்தில் தண்ணீர் இருந்தால் துடைத்து விட்டு பயன்படுத்தவும். தண்ணீர் இருந்தால் அவை காய்ந்து பாத்திரம் சூடாக சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். இதனால் கேஸ் வீணாகும்.

*என்ன குழம்பு சமைக்கிறீகளோ அந்த குழம்பிற்கு தேவையான பொருட்களை அருகில் எடுத்து வைத்துக் கொண்டு சமைக்கவும். இதனால் பொருட்களை தேடி பயன்படுத்தும் நேரமும், கேஸும் மிச்சம் ஆகும்.

Previous articleகுலதெய்வம் உங்கள் வீட்டிற்கு இந்த வடிவில் கூட வருவார்..!
Next articleகந்துவட்டி கடன் தொல்லையில் இருந்து விடுபட நவதானிய பரிகாரம் செய்யுங்கள்..!