90களில் நம் நினைவில் நின்ற சீரியல்களின் டைட்டில் தீம்.. மறக்குமா நெஞ்சம்..
நாம் அனைவரும் விரும்பி பார்த்த சீரியல்களின் டைட்டில் சாங் பற்றிய தொகுப்பு இதோ.
1.மெட்டி ஒலி
சன் தொலைக்காட்சியில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்ட புகழ் பெற்ற நாடக தொடராகும்.பிரபல சீரியல் இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் டெல்லி குமார்,காவேரி,வனஜா,ரேவதி பிரியா,சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது.இந்த சீரியல் அன்றைய காலகட்டத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த சீரியலின் டைட்டில் சாங் ரசிக்கும் படியாக இருக்கும்.இந்த சாங்கை பார்ப்பதற்காகவே பலர் காத்திருந்த காலமுண்டு.மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு முதல் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமான “அம்மி அம்மி அம்மி மிதித்து,அருந்ததி முகம் பார்த்து ஒரு குலமகள் வீட்டுக்குள்ள கொண்டு வரும் சீதனம் மெட்டி மெட்டி மெட்டி ஒலி தான்” என்ற பாடலை நம்மால் மறக்க முடியாது.பாடலாசிரியர் வைரமுத்து எழுதி, தீனா இசையமைத்த இந்த பாடலை நித்யஸ்ரீ மகாதேவன் பாடினார்.
2.சித்தி
சன் தொலைக்காட்சியில் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்ட புகழ் பெற்ற நாடக தொடராகும்.இது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.இயக்குநர் சி.ஜே.பாஸ்கர் இயக்கத்தில் ராதிகா சரத்குமார்,சிவகுமார்,தீபா வெங்கட்,ஹேமலதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது.இந்த சீரியல் அன்றைய காலகட்டத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த சீரியலின் டைட்டில் சாங் ரசிக்கும் படியாக இருக்கும்.இந்த சாங்கை பார்ப்பதற்காகவே பலர் காத்திருந்த காலமுண்டு.மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்த சீரியலின் இரண்டம் பாகம் 2020 முதல் 2021 வரை சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமான “கண்ணின்மணி கண்ணின்மணி நிஜம் கேளம்மா.கங்கை நதி வைகைநதி பெண் தானம்மா.மலை நதி என்பது முள்ளில் கல்லில் மோதி வரும்.பெண் நதி என்பது துன்பம் துயரம் தாண்டி வரும்” என்ற பாடலை நம்மால் மறக்க முடியாது.பாடலாசிரியர் வைரமுத்து எழுதி,தீனா இசையமைத்த இந்த பாடலை நித்யஸ்ரீ மகாதேவன் பாடினார்.
3.கோலங்கள்
சன் தொலைக்காட்சியில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்ட புகழ் பெற்ற நாடக தொடராகும்.இது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.இயக்குநர் திருச்செல்வன் இயக்கத்தில் தேவயானி,தீபா வெங்கட்,மஞ்சரி,அபிசேக் சங்கர்,அஜய் கபூர்,நளினி,திருச்செல்வம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது.இந்த சீரியல் அன்றைய காலகட்டத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த சீரியலின் டைட்டில் சாங் ரசிக்கும் படியாக இருக்கும்.இந்த சாங்கை பார்ப்பதற்காகவே பலர் காத்திருந்த காலமுண்டு.மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்த தொடர் என்றும் நீங்காத இனிமையான நினைவுகளாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமான “கோலங்கள் கோலங்கள் அழகான கோலங்கள்… கோலங்கள் கோலங்கள் அழியாத கோலங்கள்” என்ற பாடலை நம்மால் மறக்க முடியாது.பாடலாசிரியர் பழனி பாரதி எழுதி,டி.இமான் இசையமைத்த இந்த பாடலை ஹரிணி பாடினார்.
4.மைடியர் பூதம்
சன் தொலைக்காட்சியில் கடந்த 2004 முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்ட புகழ் பெற்ற நாடக தொடராகும்.குழந்தைகள் விரும்பி பார்த்த சீரியல்களில் ஒன்று இந்த மைடியர் பூதம்.மொத்தம் 914 எபிசோடுகள் வரை ஓடியது.இந்த தொடரில் அபிலாஷ், நிவேதா தாமஸ், காந்திமதி,வியட்நாம் வீடு சுந்தரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.இது திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.இந்த சீரியலின் டைட்டில் சாங் ரசிக்கும் படியாக இருக்கும்.இந்த சாங்கை ரசிப்பதற்காகவே நம்மில் பலர் காத்திருந்த காலமுண்டு.குழந்தைகளிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்த தொடர் என்றும் நீங்காத இனிமையான நினைவுகளாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமான “மைடியர் பூதம் நீ மைடியர் பூதம்” என்ற பாடலை நம்மால் மறக்க முடியாது.எக்ஸ்.பால்ராஜ் இசையமைத்த இந்த பாடலை ஹரிகரன் பாடினார்.
5.ராஜ ராஜேஸ்வரி
சன் தொலைக்காட்சியில் கடந்த 2005 முதல் 2006 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்ட புகழ் பெற்ற ஆன்மீக நாடக தொடராகும்.அபிதா,மாளவிகா அவினாஷ்,பிருத்விராஜ்,சண்முகசுந்தரம்,மோகன் ராம்,கே.ஆர்.விஜயா, பாத்திமா பாபு,வியட்நாம் வீடு சுந்தரம்,பிரியா மகாலட்சுமி,பேபி பிரஹர்ஷிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.இந்த சீரியலின் டைட்டில் சாங்கை ரசிப்பதற்காகவே நம்மில் பலர் காத்திருந்த காலமுண்டு.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்த தொடர் என்றும் நீங்காத இனிமையான நினைவுகளாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமான “ராஜேஸ்வரி.. ராஜ ராஜேஸ்வரி.. சக்தி மகா சக்தியே ” என்ற பாடலை நம்மால் மறக்க முடியாது.பக்தி பாடல்கள் பாடுவதில் புகழ் பெற்ற திரு. மாணிக்க விநாயகம் குரலில் இந்த பாடல் அமைந்திருக்கும்.