உங்க கல்லீரலில் உள்ள நச்சுக்களை!! மூன்று நாட்களில் நீங்க உதவும் அற்புத ஜூஸ்!!

0
116

உங்க கல்லீரலில் உள்ள நச்சுக்களை!! மூன்று நாட்களில் நீங்க உதவும் அற்புத ஜூஸ்!!

நமது உடலில் செரிமான செயலின் முக்கிய உறுப்பாக செயல்படுவது இந்த கல்லீரல் தான். இந்த கல்லீரல் தான் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதிலும் இரத்தத்தை சுத்தமாக வைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இது தான் நம் உடலில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய உறுப்பு. ஆனால் இந்த கல்லீரலில் ஏற்படும் நோயால் நிறைய பேர்கள் இறக்கின்றனர்.

கல்லீரல் சரியாக வேலை செய்யாமல் இருப்பதற்கு மட்டும் கல்லீரல் அழற்சி ஏற்படுவதற்கு அதில் தேங்கியுள்ள நச்சுக்களும் காரணமாக அமைகின்றன. கல்லீரல் பல வைரஸ்கள், பொருட்கள் மற்றும் அசுத்தங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது.

கல்லீரல் பிரச்சினைகள் இருப்பது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகிறது. எனவே தான் உலக சுகாதார நிறுவனம் கருத்துப்படி இந்தியாவில் மக்கள் இறப்பதற்கு 10 வது பெரிய காரணமாக கல்லீரல் நோய் இருக்கிறது.

உடல் பருமன், அதிகப்படியான ஆல்கஹால் மற்றும் ஹெபடைடிஸ் வைரஸ்கள் கல்லீரல் நோய்க்கு மிகவும் முக்கியமான காரணங்களாக அமைகின்றன.

எனவே தான் மருத்துவர்கள் கல்லீரலை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம் என்கிறார்கள்.எனவே கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி இலை

இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். வாயு பிரச்சனைகளை நீக்கும். உடம்பில் இன்சுலின் சுரப்பை தூண்டி சக்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்.

உடம்பில் உள்ள கொழுப்புகளை குறைத்து மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கும். ரத்தத்தில் கலந்திருக்கும் சக்கரை அளவை குறைக்கும்.

பூண்டு

இது ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். கல்லீரலை சுத்தப்படுத்துவதற்கும் உதவும். இதில் உள்ள சல்பர் கல்லீரலில் என்சைம் உற்பத்திக்கு உதவும்.

உப்பு

எலுமிச்சை பழம்

இது புத்துணர்ச்சியை தரும். இதில் உள்ள வைட்டமின் C கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். நம் கல்லீரலின் ஆரோக்கிய செயல்பாட்டுக்கு இது மிகவும் உதவும்.

தண்ணீர்

செய்முறை:

1: முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கி விட்டு பின்பு ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலையை எடுத்து அந்த தண்ணீரில் சேர்த்து நன்றாக ஒரு ஐந்து நிமிடம் வைக்க வேண்டும்.

2: பின்பு மிக்ஸி ஜாரில் நம் எடுத்து வைத்த கொத்தமல்லி இலை இரண்டு பல் பூண்டு சிறிதளவு உப்பு மற்றும் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக ஜூஸ் போன்று அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்பு அதனை ஒரு கிளாஸில் சேர்த்து அதில் பாதி எலுமிச்சை பழம் சாறு சேர்த்து கலக்கி அதனை குடிக்க வேண்டும்.

இதனை நாம் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் தொடர்ந்து மூன்று நாட்கள் காலையில் இதுபோன்று குடித்து வந்தால் கல்லீரலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

நம்ம உடம்பில் முக்கியமான உறுப்பு ஒன்றுதான் கல்லீரல். இதனை நாம் சேதப்படுத்தக் கூடாது. நாம் எடுத்திருக்கும் உணவு முறைகளில் இது போன்ற கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும்.

அதாவது மது குடித்தல், உடல் எடை அதிகமாக இருப்பது, நம் உடம்பில் உள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்காமல் இருப்பது, கொழுப்புகள் அதிகமாக இருப்பது இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் தான் கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.

வீங்கிப்போன கல்லீரலை சரி செய்யும் தன்மை நெல்லிக்காயில் உண்டு. எனவே தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.

Previous articleமருக்கள் உடனடியாக உதிர்ந்து விட இந்த பொருட்கள் போதும்!!
Next articleஒரு ஸ்பூன் போதும்!! ஞாபக சக்தி பல மடங்கு அதிகரிக்கும்!!