பள்ளி குழந்தைகள் நடந்தே வீட்டிற்கு வரும் அவல நிலை! கண்டுக்கொள்ளாத அரசாங்கம்!
நடப்பாண்டில் தான் நேரடி வகுப்பிற்கு குழந்தைகள் செல்கின்றனர்.இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றது.கிணத்து என்ற பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில்தான் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளிக்கு நூற்றுக்கணக்கான மாணவர் மாணவிகள் பயின்று வருகின்றனர்.
அந்தப் பகுதியில் காலை நேரம் மட்டும்தான் பேருந்து வசதி உள்ளது. அப்பகுதிக்கு மாலை நேரம் பேருந்து வசதி இல்லாத காரணத்தால் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் மற்றும் மாணவிகள் அனைவரும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து வீட்டுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வழியில் அரசு மதுபான கடைகள் மற்றும் விஷம் வாய்ந்த உயிரினங்கள் இருக்கும் முட்புதர்களும் அங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பற்ற முறையில் குழந்தைகள் அனைவரும் நடந்தே வீட்டிற்கு வருவதால் மாலை நேரத்தில் பேருந்து வசதி ஏற்படுத்தி தருமாறு அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.