ஈரானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

Photo of author

By Parthipan K

அமெரிக்காவுக்கும்,  ஈரானுக்கும்  அணுசக்தி தொடர்பான விசியத்தில் மோதல்கள் நீடித்து வருகின்றன. அதன் காரணமாக அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பொருளாதார தடையை விதித்தது. ஈரானின் முதன்மையான தொழிலாக விளங்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த தடையை மீறி ஈரான் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்ததாக ஈரானின் நான்கு சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்யுமாறு அமெரிக்க கோர்ட்டில் கடந்த மாதம் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் சர்வதேச கடலில் அமெரிக்க கோர்ட்டின் ஆணையை  பிறப்பிக்க சாத்தியமில்லை என நிபுணர்கள் கூறினர்.