கொடூரமாக தாக்கி குடும்பத்தினர் 5 பேரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்த இளைஞர் ! நெஞ்சை உலுக்கிய பயங்கர  சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை! 

0
226
The young man committed suicide after brutally attacking and killing 5 members of his family! Police investigation on the shocking incident!
The young man committed suicide after brutally attacking and killing 5 members of his family! Police investigation on the shocking incident!

கொடூரமாக தாக்கி குடும்பத்தினர் 5 பேரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்த இளைஞர் ! நெஞ்சை உலுக்கிய பயங்கர  சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை! 

தன்னுடைய குடும்பத்தினர் 5 பேரை தாக்கி கொடூரமாக கொலை செய்த நபர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரியில் நிகழ்ந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் மெயின்புரியில் ஒரு இளைஞர் தனது சகோதரர்கள், ஒரு சகோதரரின் மனைவி, மைத்துனர் உள்பட 5 பேரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். இவரின்  தாக்குதலில் படுகாயம் அடைந்த அந்த வாலிபரின் மனைவி மற்றும் இரண்டு பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர் பெயர் ஷிவ் வீர் யாதவ் வயது 30. என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குடும்பத் தகராறில் கொலை நடந்ததா? அல்லது கொலையாளி மனநிலை பாதிக்கப்பட்டவரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி  விட்டுள்ளனர்.

எனினும் கொலை நடந்ததற்கான  காரணம் இன்னும் சரிவர கிடைக்கப் பெறவில்லை. குடும்பத்தினரை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்யுமளவு காரணம் என்னவாக இருக்கும் என்ற ரீதியில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் மற்றும் தற்கொலை செய்த கொலையாளியின் உடல் போலீசாரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொலையாளியின் மனைவி நினைவு திரும்பியதும் தான் கொலைக்கான உண்மை காரணம் தெரிய வரும். மேலும் இந்த கொலை மற்றும் தற்கொலையால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மீண்டும் பல கோணங்களில் தீவிர விசாரணையை செய்து வருகின்றனர்.

Previous articleசெந்தில் பாலாஜியை  தொடர்ந்து கூண்டோடு சிறையா!  அடுத்தடுத்து  மாட்டும் ஆதரவாளர்கள்  2- வது நாளாக அதிரடி காட்டிய வருமான வரித்துறை!! 
Next articleஇருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அறிவிப்பு!! இனி ஹெல்மெட் கட்டாயம்!!