செந்தில் பாலாஜியை  தொடர்ந்து கூண்டோடு சிறையா!  அடுத்தடுத்து  மாட்டும் ஆதரவாளர்கள்  2- வது நாளாக அதிரடி காட்டிய வருமான வரித்துறை!! 

0
164
Senthil Balaji continues to be imprisoned in a cage! Income tax department showed action for the 2nd day by the supporters of Matta in succession!!
Senthil Balaji continues to be imprisoned in a cage! Income tax department showed action for the 2nd day by the supporters of Matta in succession!!

செந்தில் பாலாஜியை  தொடர்ந்து கூண்டோடு சிறையா!  அடுத்தடுத்து  மாட்டும் ஆதரவாளர்கள்  2- வது நாளாக அதிரடி காட்டிய வருமான வரித்துறை!! 

இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் தீவிர சோதனையில்  ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்ததா? என்பது பிறகு தெரியவரும்.

சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக வந்த புகாரின் பேரில் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை பிரிவு அவரை கைது செய்தது. இதன் காரணமாக அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை செய்து வருகிறது. அதில் சக்தி மெஸ் பங்குதாரர்கள் கார்த்திக், ரமேஷ் ஆகியோர் வீடுகளில் தலா  ஒரு அறை, பொறியாளர் பாஸ்கர் அலுவலகம், ஒப்பந்ததாரர் எம்.ச. சங்கர் ஆனந்த் வீடு, ஆடிட்டர் சந்திரசேகரின் அலுவலகம், ஜவகர் பஜாரில் உள்ள பழனி முருகன் நகைக்கடை, ஆகியவற்றில் சீல் வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து  நேற்று காலை வந்த பத்துக்கு மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் கார்த்திக், ரமேஷ் ஆகியோர் வசிக்கும் வீடுகளில் உள்ள அறைகள் உள்ளிட்ட 6 இடங்களில் வைக்கப்பட்ட சீலை அகற்றி மீண்டும் சோதனை நடத்தினர். அதில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிகிறது.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான சிவசக்தி மெஸ் கார்த்திக், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் உதவியாளர் பெரியசாமி ஆகியோரது வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

இந்த சூழ்நிலையில் இரண்டாவது நாளாக மேலும் கரூர் ஜவகர் பஜாரில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர் சோதனையில் வருமானவரித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க 20க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளர்.

சோதனையின் முடிவில் தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன யார் யார் மாட்டப் போகிறார்கள் என்ற உண்மைகள் தெரிய வரும். அடுத்தடுத்து செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வருமானவரி துறையின்  பார்வையில் சிக்கி சோதனையில் சிக்கி வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.