பத்தே நாளில் அந்த நடிகரை பின்னுக்கு  தள்ளிய இளைய தளபதி! மிரண்டு போன பிரபலங்கள்!  

0
200
#image_title

பத்தே நாளில் அந்த நடிகரை பின்னுக்கு  தள்ளிய இளைய தளபதி! மிரண்டு போன பிரபலங்கள்!  

இளையதளபதி விஜய் அந்த விசயத்தில் 10 நாட்களில் பிரபல நடிகரை  பின்னுக்குத் தள்ளியதால் பிரபலங்கள் மிரண்டு போயுள்ளனர்.

தமிழ்நாட்டில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய்.  கோலிவுட்டில் இவர் நடித்த படங்கள் எல்லாமே வசூல் வேட்டை செய்துள்ளன. விஜய்க்கு தமிழகம் மட்டும் இல்லாமல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் எது செய்தாலும் அவரது ரசிகர்கள் அதை திருவிழா போன்று கொண்டாடி தீர்த்து விடுவர்.

அவர் நடித்த படம் சுமாரானது என்றாலும் அவரது ரசிகர்களால் அது பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகிவிடும். விஜய் இறுதியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதேபோல் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இந்தப் படம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்திகளில் ஒன்று விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணக்கை தொடங்கியது தான். கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய இளைய தளபதி லியோ படத்தின் கெட்டப்பை வெளியிட்டு “ஹலோ நண்பாஸ் அண்ட் நண்பீஸ் ” என்ற கேப்ஷன் கொடுத்து இருந்தார். இதன் மூலம் ஓவர் நைட்டில் விஜய் மிகவும் பிரபலமானார்.

இதுவரை ட்விட்டர் என்ற சமூக வலைத்தளத்தில் மட்டும் தனது கணக்கை கொண்டிருந்த விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கை தொடங்கிய 10 நாட்களில் 6.7 மில்லியன் பாலோவர்ஸை பெற்று பிரபலங்களை மிரள செய்துள்ளார். விஜய்யின் இந்த குறுகிய கால வளர்ச்சி கண்டு மற்ற நடிகர்கள் ஆடிப் போய் உள்ளனர்.

விஜய்க்கு முன்னால் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை தொடங்கிய நடிகர் சூர்யா பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் 6.6 மில்லியன் பாலோவர்ஸை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஓய்வு பெற்ற இந்திய அதிகாரிகள் கைது விவகாரம்! செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த வெளியுறவுத்துறை  செய்தி தொடர்பாளர்! 
Next articleசிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! உலமாக்களின் பிள்ளைகளுக்கு அடித்தது ஜாக்பாட்!