ஓய்வு பெற்ற இந்திய அதிகாரிகள் கைது விவகாரம்! செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த வெளியுறவுத்துறை  செய்தி தொடர்பாளர்! 

0
144
#image_title

ஓய்வு பெற்ற இந்திய அதிகாரிகள் கைது விவகாரம்! செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த வெளியுறவுத்துறை  செய்தி தொடர்பாளர்! 

கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ள எட்டு இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளுக்கு தூதரக உதவி உள்ளிட்ட அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளதாவது,

இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வாராந்திர செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார்.

கத்தார் நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கைது செய்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளை விடுவிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் தற்போது சட்ட நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கைது செய்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு தூதரக உதவி சட்ட ரீதியான உதவி உள்ளிட்ட அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கத்தார் நாட்டு அதிகாரிகளுடனும் இது தொடர்பாக தாங்கள் கலந்தாலோசித்து வருவதாக தெரிவித்தவர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகமும் இந்தியர்களின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேசி வருவதாக குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை வரும் மே மாதம் வர இருப்பதாக தெரிவித்த அவர் அதற்கு முன்னதாக இந்த வழக்கில் என்ன செய்ய முடியும் என்பது குறித்து தாங்கள் முயற்சித்து வருவதாக குறிப்பிட்டார்.

இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற 8 அதிகாரிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தோஹாவில் கைது செய்யப்பட்டனர்.

தற்போது கத்தாரின் தோஹாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்த முன்னாள் அதிகாரிகள் எதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Savitha