எம்.ஜி.ஆரை கொல்ல முயற்சி நடந்தது… – டிரைவர் பவானி கிருஷ்ணன் பகீர் தகவல்!
எம்.ஜி.ஆரை கொல்ல முயற்சி நடந்ததாக டிரைவர் பவானி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். இவர் சிறு வயதிலிருந்தே பல துன்பங்களை அனுபவித்துள்ளார். வறுமையில் பசியால் வாடியுள்ளார். 7 வயது முதல் நடிக்கத் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் மட்டுமே நடித்து புகழ் பெற்றார். தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை வேலை இல்லாமல் இருக்கும் தன்னுடைய நண்பர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் உதவி செய்து வந்தார். இதன் பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றார். தமிழக அரசியலில் ஈடுபட்டு தமிழக முதலமைச்சராகவும் வலம் வந்தார்.
இப்படிப்பட்ட நல்ல குணம் கொண்ட எம்ஜிஆருடன் கார் டிரைவராக இருந்தவர் பவானி கிருஷ்ணர். இவர் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, அவர் எம்ஜிஆர் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில்,
முதலில் அறிஞர் அண்ணாவிற்குதான் நான் கார் ஓட்டினேன். அதன் பிறகு கலைஞர் ஐயா, எம்.ஜிஆர் ஐயா, ஜானகி அம்மா, ஜெயலலிதா அம்மா அவர்களுக்கு நான் கார் ஓட்டினேன்.
ஆதலால் கார் ஓட்டும்போது யார் நிறுத்தினாலும் காரை நிறுத்தக்கூடாது. காருக்கு சேதம் ஆகிவிடும், நான் உன்னை திட்டிவிடுவேன் என்றெல்லாம் நினைக்ககூடாது.. காரை நிறுத்தாமல் ஓட்டு என்று என்னிடம் சொல்லிவிடுவார்.
எம்ஜிஆர் ஐயா நான் வேலைக்கு சேர்ந்து முதல் 6 மாதம் வாங்க, போங்க என்று பேசினார். அதன் பிறகு வா, போ என்று உரிமையோடு கூப்பிட ஆரம்பித்துவிட்டார். கார் பின்னாடி எப்போதும் ஒரு துப்பாக்கி இருக்கும். ஒருமுறை காரை சோதனை செய்யும்போது நான் பார்த்துவிட்டு அவரிடம் கேட்டேன். என்னது துப்பாக்கியெல்லாம் காரில் இருக்கிறது என்று. அதற்கு எம்ஜிஆர் சொன்னார், என்னை யாராவது கொலை செய்ய வந்துவிட்டால்.. என் தற்காப்புக்காத்தான் அதை வைத்துள்ளேன் என்று கூறினார்.