உடலில் இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள் இவை!
1)சிவப்பு இறைச்சி
உடலில் இரத்த உற்பத்தியில் பிரச்சனை இருந்தால் அசைவ பிரியர்கள்.. சிவப்பு இறைச்சி சாப்பிடவும். இந்த இறைச்சி உணவிற்கு பிறகு 1 கிளாஸ் வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடலில் இரத்த உற்பத்தி அதிகமாகும்.
2)தயிர் + மஞ்சள்
ஒரு கப் பசுந்தயிரில் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
3)தேன் + கருப்பு எள்
கருப்பு எள்ளில் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். தேனில் உள்ள காப்பர் மற்றும் எள்ளில் அயர்ன் சத்து நிறைந்து இருக்கின்றது.
4)முருங்கை கீரை
இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரையை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். முருங்கை கீரையை உட்கொண்ட பின்னர் 1 கிளாஸ் எலுமிச்சை ஜூஸ் அருந்தவும்.
5)பீட்ரூட் + நெல்லிக்காய்
ஒரு கப் பீட்ரூட் + நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
6)பேரிச்சம் பழம் + தேன்
இரும்பு சத்து மிக்க பேரிச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.