சுக்கிரன் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

0
31
#image_title

சுக்கிரன் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

சுக்கிரன் பகவான் அக்டோபர் 2ம் தேதியிலிருந்து கடக ராசியிலிருந்து சிம்ம ராசியில் பெயர்ச்சி செய்து வருகிறார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் –

மேஷம்

சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு சில சோதனைகள் தேடி வரும். இல்ல வாழ்க்கையில் மனக்கசப்பு ஏற்படும். குடும்பத்தில் அன்பு, ஆதரவைப் பெற கடினமாக இருக்கும். திடீரென்று பயணங்கள் மேற்கொள்வீர்கள். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

சுக்கிரன் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு சில நன்மைகள் கிடைக்கப்போகிறது. வேலைகள் தடையின்றி நடக்கும். வாகனம் வாங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களால் நல்ல செய்தி வரும்.

மிதுனம்

சுக்கிரன் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு மகிழ்ச்சியான நல்ல செய்தி தேடி வரும். குடும்பத்தில் அன்பு நிலைக்கும். பணம் செலவிட நேரிடும். திட்டங்களை வகுத்து செயல்படுங்கள். உங்கள் முயற்சி வீண் போகாது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள்.

கடகம்

சுக்கிரன் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களே உங்களுக்கு நன்மைகள் தேடி வரும். வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கண்களில் பிரச்சினை ஏற்படும். திட்டமிட்டு செயல்படுங்கள். நேர்மையாக இருங்கள். யோசித்து பேசுங்கள்.

சிம்மம்

சுக்கிரன் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செயல்களை திட்டமிட்டு செயல்படுங்கள். எதிரிகளால் தொந்தரவு ஏற்படும். புதிய வேலைகள் கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்லும் யோகம் கிடைக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்.

கன்னி

சுக்கிரன் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு நன்மைகள் பல கிடைக்கும். செயல்களை திட்டமிட்டு செய்யுங்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறையுங்கள். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு ஆதாயத்தை கொடுக்கும்.

துலாம்

சுக்கிரன் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு சில பொறுப்புகள் கிடைக்கும்.  வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு வரும். வெளிநாட்டு வேலைகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.

விருச்சிகம்

சுக்கிரன் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரும். நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வியாபாரம் சிறக்கும். வேறு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். தொழில் சிறக்கும்.

தனுசு

சுக்கிரன் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். நீங்கள் செய்யும் வேலை சிறப்பாக செய்வீர்கள். அதில் பாராட்டு பெறுவீர்கள். தொழில் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள். கடன் வாங்குவதை, கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். தொழில் வாழ்க்கைக்கு இடையே சமநிலையை பேணுவது நன்மை தரும்.

author avatar
Gayathri