மூல நோயை விரட்டும் துத்தி கீரை கடையல் – ருசியாக செய்வது எப்படி?

0
79
#image_title

மூல நோயை விரட்டும் துத்தி கீரை கடையல் – ருசியாக செய்வது எப்படி?

துத்தி கீரை கிராமப்புறங்களில் தானாக வளர்ந்து நிற்கும்.நாம் இதை கலைச்செடி என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.ஆனால் அது உண்ண தகுந்த கீரை என்பது பலரும் அறியாத ஒன்று.இந்த துத்தி கீரை மூலநோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.இந்த துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி மூலத்தில் கட்டினால் அதன் வீக்கம் குறையும்.

அதேபோல் இந்த துத்தி கீரை மலக்கட்டு,ஆசனவாய் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது.இந்தக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர தசைகளுக்கு நல்ல வலு கிடைக்கும்.உடலில் உள்ள காயங்களை ஆற இந்த துத்தி கீரை பெரிதும் உதவுகிறது.
ஆண்மை குறைபாடு இருப்பவர்களுக்கு துத்தி கீரை சிறந்த தீர்வாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*துத்திக்கீரை – 1 கைப்பிடி அளவு

*நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி

*சாம்பார் வெங்காயம்  – 10 முதல் 12

*துவரம் பருப்பு – 3 தேக்கரண்டி (வேக வைத்தது)

*மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி

*சீரகம் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

1)ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி துத்தி கீரையை போட்டு நன்கு அலசி ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.பிறகு அதை பொடியாக நறுக்கி கொள்ளவும்.அதன் பின் சாம்பார் வெங்காயம் என்று சொல்லப்படும் சின்ன வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

2)அடுப்பில் கடாய் வைத்து அதில் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளவும்.அவை சூடேறியதும் சீரகத்தை போட்டு பொரிய விடவும்.பின்னர் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் துத்தி கீரையை போடவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.அதன் பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

3)துத்தி கீரை நன்றாக வதங்கி வந்த பின் வேகவைத்து துவரம் பருப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிண்டவும்.பிறகு தேவையான அளவு உப்பு கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த துத்தி கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தோம் என்றால் மூலம்,பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல்,பல் ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவு ஆகியவை குணமாகும்.