நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள் இவை..!

0
207
#image_title

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள் இவை..!

கோயிலில் கற்பூரம் மற்றும் விளக்கை கையில் ஏற்றியவாறு கடவுளை வணங்கக் கூடாது.

காயத்ரி மந்திரத்தை சுத்தமான இடத்தில் மட்டுமே உச்சரிக்க வேண்டும்.

இரவு 9 மணி – அதிகாலை நேரம் 3 மணி வரை ஆறு, நதிகளில் நீராடக் கூடாது.

ஆலயத்திற்குள் வீண் கதை பேசக் கூடாது. இறைவனின் சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும்.

காலை நேரத்தில் சூரிய பகவான் உதயம் ஆகும் நேரத்தில் அவரை வணங்குவது சிறப்பு.

குலதெய்வத்தை அமாவாசை அன்று வழிபட்டு வருவது சிறப்பு.

தங்களை தாங்களே சுற்றிக் கொண்டு கடவுளை வணங்கக் கூடாது.

கோயிலில் அன்னதானம் வழங்குவதால் வாழ்வில் முன்னேற்றம் நிகழும்.

வீட்டு வாசலில் பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வைப்பது நல்லது.

கர்ப்பிணி பெண்கள் சிதறு தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கக் கூடாது.

வீட்டின் நிலைகளில் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும்.

பூஜைக்கு ஏற்றிய சூடத்தை அணைக்கக் கூடாது. தானே அணைய வேண்டும்.

பெண்கள் பூசணிக்காய் உடைத்தல், அறுத்தல் கூடாது.