இந்த மாணவர்களுக்கு வகுப்பறைக்குள் அனுமதி இல்லை!அரசின் அதிரடி உத்தரவு!
கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கடந்தும் ,தற்போது வரை அதன் பாதிப்பை மக்கள் சந்தித்து வருகின்றனர்.அதிலிருந்து மீளும் போதெல்லாம்,மீண்டும் தொற்று பாதிப்பு பரிணாம வளர்ச்சி அடைந்து அதிகளவு பாதிப்புக்களை தந்துவிடுகிறது.இதனை தடுக்க தடுப்பூசி மற்றும் தொற்று கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டாலும்,இதிலிருந்து நிரந்தரமாக வெளிவர முடியவில்லை.தற்போது வரை அடுத்தடுத்த அலையை கடந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இந்த தொற்று பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியாக பின்னோக்கி சென்றுவிடுகிறது.முதன்முதலில் பெரியவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வரவழைக்கப்பட்டது.தற்போது சிறார்களுக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
நமது தமிழகத்தில் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு இருக்கையில் நான்காவது அலை பாதிப்பானது கணிசமாக நாளுக்கு நாள் உயர்ந்து காணப்படுகிறது.வட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நமது தமிழகத்தில் மட்டும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1000 ஐ தாண்டும் நிலைக்கு வந்துவிட்டது.தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த மீண்டும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளனர்.பொது இடங்களில் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்றும் அறிவுறித்தியுள்ளனர்.
தற்போது தமிழகத்தில் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது.நாளடைவில் அனைத்து மாநிலங்களிலும் பொதுத்தேர்வு தொடங்கிவிடும்.அதற்குமுன்னதாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அந்தவகையில் தற்போது தான் சண்டிகர் மாநிலத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளனர்.பல மாணவர்கள் தடுப்பூசிக்கு அச்சப்பட்டு தடுப்பூசி போடுவதை தவிர்த்து வருகின்றனர். அதனால் அம்மாநில அரசு புது கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளது.தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாணவர்களை வகுப்பறையில் அனுமதிக்க கூடாது என கூறியுள்ளனர்.தடுப்பூசி செலுத்தி வந்த பிறகே வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மாணவர்கள் நேரடி வகுப்பில் கலந்து கொள்ள முடியாது.