திருமணத்திற்கு ரெடியாகும் பெண்களுக்கு இந்த டிப்ஸ் அவசியம்!! வீட்டிலேயே செய்யலாமாம்!!

0
141

திருமணத்திற்கு ரெடியாகும் பெண்களுக்கு இந்த டிப்ஸ் அவசியம்!! வீட்டிலேயே செய்யலாமாம்!!

ஒவ்வொருவருக்கும் முகம் பொலிவாக, அழகாக இருக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், அதற்காக செய்ய வேண்டிய சில வழிமுறைகளை செய்கிறோமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

நீங்கள் சாதாரணமாக ஒரு வேலைக்கு சென்றாலோ அல்லது வெளியில் ஏதாவது ஒரு சுப காரியங்களுக்கு சென்றாலோ முகப்பொலிவுடன் இருக்க வேண்டியது மிக அவசியமான ஒன்றாக உள்ளது. அதுவும் இன்றைய காலகட்டத்தில் அழகு என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

முகத்தில் வரும் பிரச்சனைகளை பட்டியலிட்டாலே 10க்கும் மேற்பட்டு சொல்லலாம். முகத்தின் மிருதுதன்மை, சருமம் சொரசொரப்பு, சருமத்தில் நிறம் மாற்றம், பருக்கள், பருக்களால் வடுக்கள், கரும்புள்ளிகள், தேமல், கருவளையம், கண்களுக்கு கீழ் இரப்பை வீக்கம், முகத்தில் முடி இப்படி இன்னும் கூட சில பிரச்சனைகள் வருவதுண்டு.

மார்க்கெட்டில் இருந்து வாங்கும் கெமிக்கல்ஸ் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டிலேயே இயற்கையாக எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து ஒரு ஃபேஸ் மாஸ்க் செய்து.

அதை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நம்ம சருமத்திற்கு எந்த வித பக்க விளைவும் இல்லாமல் இயற்கையான முறையில் முகப்பொலிவும் ,கரும்புள்ளிகள் மறைந்து முகம் பிரகாசமாக மாற தொடங்கும்.

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய்

எலுமிச்சை பழம்

புதினா தலை

செய்முறை:

1: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

2: பின்பு அந்த தண்ணீரில் நறுக்கி வைத்த வெள்ளரிக்காயை சேர்க்கவும்.

3: எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக அறுத்து அதில் பாதி எலுமிச்சை சாறை பிழிந்து கொள்ளவும்.

4: இந்த அதே சிறிதளவு புதினா தலையை சேர்க்கவும்.

5: அனைத்தையும் சேர்த்தவுடன் நன்றாக கலக்கி விட்டு இரவு முழுக்க ஊற வைத்துக் கொள்ளவும்.

அந்த தண்ணீரை தினமும் காலையில் குடித்து வந்தால் போதும் நம் முகம் தங்கம் போல் ஜொலிக்கும்.

இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நம் வயிற்றில் உள்ள நச்சுத்தன்மைகள் அனைத்தும் நீங்கிவிடும் முகத்திற்கு நல்ல பொலிவை தரும்.

95% உள்ள வெள்ளரிக்காயை தினமும் நாம் சேர்த்து வந்தால் உடம்பு குளிர்ச்சியாக இருக்கும்.

காலையில் இந்த பானத்தை குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பை நீக்கும் மற்றும் உடல் எடை குறைவாக இருக்கும்.

இந்த பானத்தை தினமும் காலையில் குடித்து வந்தால் கரும்புள்ளி ,முகப்பரு ஆகிய பிரச்சனைகள் தீர்ந்துவிடும் மற்றும் இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட், வைட்டமின் C இது போன்ற இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Previous articleதாங்க முடியாத முதுகு வலியால் அவஸ்தை படுகிறீர்களா?? இதோ தீர்வு!!
Next articleஇந்த ஒரு பழம் இருந்தால் போதும்!! வாழ்நாள் முழுவதும் அல்சர் பிரச்சனை வராது!!