உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள இந்த இரண்டு பொருட்கள் போதும்!!
நம்மில் பலரது முகம், மற்றும் உடல் கருமையாக பொலிவிழந்து காணப்படும். இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம். இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம்.
முகம் பொலிவற்று காணப்பட காரணங்கள்:-
*முகத்தில் எண்ணெய் வடிதல்
*முகப்பரு
*கரும்புள்ளி பாதிப்பு
*முகக் கருமை
*இரசாயனம் கலந்த க்ரீம் பயன்படுத்துதல்
தீர்வு 1:
தேவையான பொருட்கள்:-
*சந்தனம்
*பன்னீர்(ரோஸ் வாட்டர்)
செய்முறை…
ஒரு துண்டு சந்தனக் கட்டையை காயவைத்து பொடி செய்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதில் பன்னீர்(ரோஸ் வாட்டர்) தேவையான அளவு ஊற்றி நன்கு குழைத்து பேஸ்ட்டாகி கொள்ளவும்.
பின்னர் இதை முகம் மற்றும் சருமத்திற்கு அப்ளை செய்து அரை மணி நேரம் வரை வைத்திருந்து பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தோம் என்றால் சருமம் அதிக பொலிவாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
தீர்வு 2:
தேவையான பொருட்கள்:-
*சந்தானம்
*பன்னீர்(ரோஸ் வாட்டர்)
*மஞ்சள் தூள்
செய்முறை…
ஒரு துண்டு சந்தனக் கட்டையை காயவைத்து பொடி செய்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதில் பன்னீர்(ரோஸ் வாட்டர்) மற்றும் முகத்திற்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் தேவையான அளவு சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட்டாகி கொள்ளவும்.