3 நாட்களில் மெல்லிய புருவம் கருகருன்னு அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ இப்படி செய்யுங்க போதும்!!

0
28
#image_title

3 நாட்களில் மெல்லிய புருவம் கருகருன்னு அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ இப்படி செய்யுங்க போதும்!!

பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண் புருவமும் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால் எல்லா பெண்களுக்கும் புருவம் அடர்த்தியாகவும்,கருமையாகவும் இருப்பதில்லை.மெல்லிய கண் புருவங்களை அடர்த்தியாக வளர்க்க எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாத இயற்கை முறையில் தீர்வு காணலாம்.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*சின்ன வெங்காயம் – 5

*விளக்கெண்ணெய் – 1/2 தேக்கரண்டி

*பட்ஸ் – 1

செய்முறை:-

முதலில் 5 சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கி கொள்ளவும்.பின்னர் அதை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பிறகு வெங்காயச் சாறை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.அடுத்து அதில் 1/2 தேக்கரண்டி அளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

அடுத்து பட்ஸ் 1 எடுத்து தயார் செய்து வைத்துள்ள வெங்காயச் சாறு + விளக்கண்ணெய் கலவையில் நினைத்து கண் புருவங்களின் மேல் தடவி விடவும்.

இரவு இதை பயன்படுத்தினால் விரைவில் பலன் கிடைக்கும்.பகல் நேரங்களில் பயன்படுத்தினால் 1 மணி நேரம் வரை வைத்திருந்து பின்னர் முகத்தை கழுவ வேண்டும்.இவ்வாறு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் மெல்லிய புருவம் கருமையாக மாறிவிடும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*கற்றாழை துண்டு – 1

*தேங்காய் எண்ணெய் – 1/2 தேக்கரண்டி

*பட்ஸ் – 1

செய்முறை:-

முதலில் கற்றாழை 1 துண்டு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பின்னர் அதில் உள்ள ஜெல்லை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்ததாக 1/2 தேக்கரண்டி சுத்தமான நல்லெண்ணெய் எடுத்து அதில் சேர்த்துக் கொள்ளவும்.இதை நன்கு கலந்து விடவும்.

அடுத்து ஒரு பட்ஸ் எடுத்து தயார் செய்து வைத்துள்ள கற்றாழை ஜெல் + தேங்காய் எண்ணெய் கலவையில் நினைத்து கண் புருவங்களின் மேல் தடவி விடவும்.