மர்ம நபர்களால் வாலிபர் ஓட ஓட வெட்டிக்கொலை!! கொடூர கொலை குறித்து போலீஸ் தீவிர விசாரணை!!

0
157

திருப்பூரில் வாலிபரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் என்ற பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. மேலும், அதன்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டபோது, சடலமாக கிடந்த வாலிபரின் உடல் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. அதனை அடுத்து வாலிபர் இறந்து கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் வரையிலும் சாலையில் ரத்தம் சிந்தி இருந்தது.

மேலும் காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனைப் பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த வாலிபர் வீராட்சி மங்களம் பகுதியில் வசித்துவந்த தொழிலாளியான கோபிநாத் என்பது தெரியவந்து உள்ளது.

மேலும் இவர் தனது நண்பர்களுடன் முயல் வேட்டைக்கு சென்றுவிட்டு அதிகாலை 3 மணிக்கு வீடு திரும்புவார் என்று தெரியவந்து உள்ளது. இதனை அடுத்து கோபிநாத்தை யாரோ செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உள்ளனர். இதன் காரணமாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு கோபிநாத் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

அதன்பிறகு பிறகு கோபிநாத்தை மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டிக் கொலை செய்து உள்ளனர் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கோபிநாத்தை கொடூரமாக கொலை செய்த மர்ம நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Previous articleஅரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறைப்பு!! பத்திரம் மூலம் பணம்?.,ஊழியர்கள் அப்செட்!!
Next articleஇளைஞர்களுக்கு இனி வேலை வாய்ப்புக்கு பஞ்சமே இல்ல!! முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!