உயிர்போகும் நொடியில் திருமாவளவனின் தாயார் கேட்ட வேண்டுகோள்!முகநூலில் வெளிவந்த நெஞ்சை உருக்கும் பதிவு! 

0
177
Even though you were there when Uzuru went !! Heart-wrenching mother's words !!
Even though you were there when Uzuru went !! Heart-wrenching mother's words !!

உயிர்போகும் நொடியில் திருமாவளவனின் தாயார் கேட்ட வேண்டுகோள்!முகநூலில் வெளிவந்த நெஞ்சை உருக்கும் பதிவு!

80 வயதை நெருங்கியாச்சு திடீரென என் அம்மாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சில நாட்கள் கழித்துதான் எனக்குத் தெரிய வந்தது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார். இந்நிலையில் அம்மாவின் உடல் நிலையை அறிந்த முக ஸ்டாலின் திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் உடல் நிலையை பற்றி கேட்டறிந்தார்.

விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான தொல். திருமாவளவனின் தாயாரான பெரியம்மாள், அவருடைய சொந்த ஊரான அரியலூரில் உள்ள தன்னுடைய வீட்டிலே பாதுகாக்கப்பட்டு வருகிறார்.இந்நிலையில் பெரியம்மாக்கு திடீரென உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் யாரும் இல்லாததால் தனியாகவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர் அவருக்கு இதயத்தில் மூன்று இடத்தில் அடைப்பு இருப்பதை உறுதி செய்தனர்.

பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு ஒன்றை அகற்றினார்கள். அவருடைய தாயார் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது உசுரு போகும் போது நீ என் கூட இருந்த போதும் என்று கூறினார்.அப்போது என் அடிவயிறு புரட்டி போட்டமாறி இருந்தது என்று முகநூலில் பதிவிட்டிருந்தார்.மேலும் சில நாட்கள்  கழித்துதான் எனக்குத் இதை பற்றி தெரிய வந்தது.அம்மா சிகிச்சை செய்து கொண்டு வீடு திரும்பிய  போதுதான் அம்மாவை அவசரமாக   சென்னைக்கு அழைத்து வர செய்தேன்.

ஜூன் 22 மாலை நடந்த ஆஞ்சியோ சோதனையில்தான் அவருக்கிருந்த ஆபத்து தெரியவந்தது.இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருந்ததைக் கண்டறிந்து ஓரிடத்தில் மட்டும் அடைப்பு நீக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டம் அமைவதற்கு ஏதுவாக ஸ்டென்ட் எனும் ஒன்றைப் பொருத்தியுள்ளனர்.மேலும்  இது அறுவை சிகிச்சை அல்ல என்றும் ஆனாலும் இது ஒரு சவாலான மருத்துவப் பணிகளாகும். மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மகத்தானது என அதில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் மு.க ஸ்டாலின் அவர்கள்  விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரது தாயாரின் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் . இதுகுறித்து பதிவிட்டுள்ள திருமாவளவன் இன்று காலை எட்டு மணியளவில் தமிழக முதல்வர் @mkstalin அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம்மாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மாண்புமிகு முதல்வர் அவர்கள் எனக்கு சில ஆறுதலான வார்த்தைகளை கூறினார். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார்.

Previous articleஇனி 2000ரூபாய் நோட்டுககளை  டெபாசிட் செய்ய முடியாதா!வங்கி  கூறிய பதில்?
Next articleபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு கோர்ட்டில் வேலையா! இதோ முழு விவரங்கள்