இழந்த இளமையை மீட்டெடுக்க இது ஒன்று போதும்! 100% தீர்வு உண்டு!

Photo of author

By Divya

இழந்த இளமையை மீட்டெடுக்க இது ஒன்று போதும்! 100% தீர்வு உண்டு!

தற்பொழுது 30 வயதை தாண்டி விட்டாலே வயதான தோற்றத்தை அடைந்து விடுகிறார்கள். காரணம் வாழ்க்கை முறை மாற்றம். ஆரோக்கிய உணவு, பழங்களை உட்கொள்ளாமல் இருத்தல், சருமத்தை பராமரிக்க தவறுதல் போன்றவற்றால் இளம் வயதில் ஏற்படும் முதுமை தோற்றத்தை சரி செய்ய ஆவாரம் பூவை மேனிக்கு பயன்படுத்துவது நல்லது.

தேவையான பொருட்கள்:-

ஆவாரம்பூ
காஸ்ட்டிக் சோடா
தேங்காய் எண்ணெய்
சோப் மோல்ட்

சோப் தயாரிக்கும் முறை:-

ஒரு கப் ஆவாரம்பூவை காம்பு நீக்கி தண்ணீர் ஊற்றி நன்கு அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து சுத்தம் செய்த ஆவாரம் பூவை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் ஒரு கப் காஸ்ட்டிக் சோடா மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டி கொண்டு கலந்து விடவும்.

காஸ்ட்டிக் சோடாவை கைகளால் தொட வேண்டாம். பிறகு அரைத்து வடிகட்டி வைத்துள்ள ஆவாரம் பூ சாற்றை அதில் சேர்க்கவும்.

அடுத்து பயன்படுத்த வேண்டியது தேங்காய் எண்ணெய். செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணையை இதற்கு பயன்படுத்த வேண்டும். ஆறு கப் அளவிற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் போதுமானது.

இதை அனைத்தையும் நன்கு கலந்த பிறகு ஒரு சோப் மோல்டில் ஊற்றி 10 மணி நேரத்திற்கு நிழலான இடத்தில் காய விடவும். பிறகு எடுத்து பார்த்தால் ஆவாரம்பூ சோப் ரெடியாகி விடும்.

இதை தினமும் குளிக்கும் பொழுது சருமத்திற்கு பயன்படுத்தி வரலாம். இதனால் வறண்ட சருமம் மிருதுவாகும்.