இந்த தோசை உங்கள் உடலை இரும்பு போல் வலிமையாக்கும்!

0
108
#image_title

இந்த தோசை உங்கள் உடலை இரும்பு போல் வலிமையாக்கும்!

தற்பொழுது உள்ள உணவுமுறை பழக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு கேடாக இருக்கின்றது. இதனால் எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாகும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டு விடுகின்றோம். எனவே உடலுக்கு தேவையான வலிமை கிடைக்க முருங்கை கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சிலர் முருங்கை கீரையை விரும்ப மாட்டார்கள். ஆனால் முருங்கை கீரையை மாவில் அரைத்து தோசை வார்த்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்:-

*பச்சை அரிசி – 2 கப்
*உளுந்து பருப்பு – 1/4 கப்
*முருங்கை இலை – 1/4 கப்
*பெரிய வெங்காயம்(நறுக்கியது) – 1/4 கப்
*பச்சை மிளகாய்
(அல்லது) வர மிளகாய் – காரத்திற்கேற்ப
*இஞ்சி – 1 துண்டு
*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் பச்சரிசி மற்றும் உளுந்து பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

அரிசி மற்றும் உளுந்து நன்கு ஊறி வந்த பின்னர் இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து முருங்கை இலையை சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும். இதை அரைத்த மாவில் சேர்க்கவும். அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து 8 மணி நேரத்திற்கு புளிக்க வைக்கவும்.

பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். அதேபோல் பச்சை மிளகாய் அல்லது வர மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து அவை சூடானதும் அரைத்த முருங்கை கீரை மாவை ஊற்றி தோசை வார்க்கவும். தோசை மேல் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்து தேவைப்பட்டால் எண்ணெய் ஊற்றி வேக விடவும்.

தோசை நன்கு வெந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இந்த தோசையை வாரம் இருமுறை செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.