இந்த ஹெர்பல் பேஸ்ட் உங்கள் தலை முடியின் நீளத்தை ஸ்கேல் வைத்து அளக்க வைக்கும்!

Photo of author

By Divya

இந்த ஹெர்பல் பேஸ்ட் உங்கள் தலை முடியின் நீளத்தை ஸ்கேல் வைத்து அளக்க வைக்கும்!

நமது பாட்டி காலத்தில் பெண்களுக்கு கூந்தல் அடர்த்தி மற்றும் நீளம் அதிகமாக இருக்கும். கூந்தலே அவர்களுக்கு தனி அழகை கொடுக்கும். ஆனால் இன்றைய காலத்தில் முடிக்கு தேவையான ஆரோக்கியம் இல்லாமல் முடி எலிவால் போல் இருக்கிறது.

இவ்வாறு தலை முடியின் அடர்த்தி மற்றும் நீளம் குறைவாக உள்ளவர்கள் ஹெர்பல் பேஸ்ட் தயாரித்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சீகைக்காய் பொடி
2)செம்பருத்தி பொடி
3)கற்றாழை ஜெல்
4)தேங்காய் எண்ணெய்
5)கறிவேப்பிலை பொடி

சீகைக்காய் பொடி, செம்பருத்தி பொடி மற்றும் கறிவேப்பிலை பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி சீகைக்காய் பொடி, 2 தேக்கரண்டி செம்பருத்தி பொடி, 1 தேக்கரண்டி கறிவேப்பிலை பொடி, சேர்த்து கலந்து கொள்ளவும்.

அடுத்து அதில் 4 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து கலக்கவும். பிறகு அதில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கி பேஸ்டாக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரத்திற்கு ஊற விடவும். பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு தலை முடியை நன்கு அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வர தலை முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.