வீட்டில் டேரா போட்டிருக்கும் எறும்பு கூட்டத்தை நொடியில் காலி செய்ய இது ஒன்று போதும்!

0
270
#image_title

வீட்டில் டேரா போட்டிருக்கும் எறும்பு கூட்டத்தை நொடியில் காலி செய்ய இது ஒன்று போதும்!

எறும்பு தொல்லை இல்லாத வீடு கிடையாது. வீட்டில் கடுகளவு இனிப்பு விழுந்தாலும் அதை சுற்றி 1000 எறும்புகள் மொய்க்கிறது. இந்த எறும்புகள் தொல்லையில் இருந்து விடுபட எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1)எலுமிச்சை சாறு
2)உப்பு
3)தண்ணீர்

ஒரு கிண்ணத்தில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து கொள்ளவும். அதன் பின்னர் 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பிறகு 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலக்கி ஸ்ப்ரே பாட்டிலில் சேர்க்கவும். இதை எறும்பு நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அவை அனைத்தும் தெறித்தோடி விடும்.

1)பட்டை
2)மிளகு
3)வினிகர்

ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு துண்டு பட்டை மற்றும் 4 மிளகு சேர்த்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து 2 தேக்கரண்டி அளவு வினிகர் மற்றும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். இதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி எறும்பு நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அவை அனைத்தும் தெறித்தோடி விடும்.

1)ஆரஞ்சு பழ தோல்
2)தண்ணீர்

1/4 கப் அளவு ஆரஞ்சு பழ தோலை உலர்த்தி அரைத்து பொடி செய்து கொள்ளவும். ஒரு கிளாஸ் அளவு நீரில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இந்த நீரை ஊற்றி எறும்பு கூட்டத்தின் மீது ஸ்ப்ரே செய்தால் அவை அனைத்தும் எளிதில் காலியாகி விடும்.

Previous articleஇந்த ஹெர்பல் பேஸ்ட் உங்கள் தலை முடியின் நீளத்தை ஸ்கேல் வைத்து அளக்க வைக்கும்!
Next articleஜீரோ பட்ஜெட் ஆர்கானிக் ஹேர் டை!! இதை தடவிய நொடியில் நரை முடி கருப்பாகும்!!