இதுதான் சரியான தருணம் உடனடியாக வெளியேறுங்கள்! ரஷியா அதிரடி!!

Photo of author

By Parthipan K

இதுதான் சரியான தருணம் உடனடியாக வெளியேறுங்கள்! ரஷியா அதிரடி!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இன்று பத்தாவது நாளாகத் தொடர்ந்தது. உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வந்தது. இதனால் அங்குள்ள வெளிநாட்டினர் பாதுகாப்பாக வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது.

போர் ஆரம்பித்த நேரத்தில் இந்திய மாணவர்கள் உட்பட சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு இருந்தார்கள் எனத் தகவல் வெளியானது. அங்குச் சிக்கியுள்ளவர்கள் அண்டை நாடுகள் வழியாகத் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இதனிடையே, ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வந்ததால் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள நகரங்களில் வசிக்கும் இந்தியர்களால் அண்டை நாடுகளுக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில், மனிதாபிமான அடிப்படிடையில் அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் உக்ரைன் மீதான போரைத் தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. வோல்னோவாகா மற்றும் மரியுபோல் ஆகிய இரு நகரங்களில் மட்டும் இந்த தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை ரஷ்யா அறிவித்துள்ளது. அதேபோல மற்ற நகரங்களில் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.

பொதுமக்கள் வெளியேற மனிதாபிமான அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. இந்த நேரத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டினர் உட்பட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு எத்தனை மணி நேரம் அமலில் இருக்கும் என்பது தொடர்பாக ரஷ்யா இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.