100 நாள் வேலை ஆட்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இழுத்தடிக்கப்பட காரணம் இது தான்!! அதிகாரிகளே ஒப்புக் கொண்டனர்!!
நம் நாட்டின் கிராமப்புற மக்களுக்கு என்று கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று “மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டம்”. இது 100 நாள் வேலை திட்டம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த திட்டம் உருவாக முக்கிய நோக்கம் கிராமபுற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை தூர்வருவதற்கும் தான். அதுமட்டும் இன்றி சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக் கன்றுகள் நடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆண்டுக்கு 100 நாட்கள் என்ற அடிப்படையில் பெண்கள் மட்டும் இன்றி இதில் வயதானவர்கள், ஊனமுற்றோர்கள் என அனைவரும் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 5 கோடியே 97 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அவ்வப்போது இந்த திட்ட பணியாளர்களுக்கான ஊதிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.294 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த ஊதியம் அந்தந்த பணியாளர்களின் அக்கவுண்டிற்கு அரசு செலுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக 100 நாள் வேலை ஊதியம் வழங்கப்படாமல் இருபத்தினால் கஷ்டப்படும் குடும்ப பெண்கள், வயதானவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த ஊதியத்தை நம்பி தான் பலர் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக நிலக்கோட்டை பகுதி 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சியில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் இந்த 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளிகள் ஆவர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் இருந்து ஊதியம் வழங்காமல் மேல் அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
அதுமட்டும் இன்றி தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரே வாரமே இருக்கும் நிலையில் சம்பள பணம் இல்லாமல் எப்படி கொண்டாடுவது என்றும் ஒரு சில நாட்களில் மொத்த ஊதியத்தையும் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.
நிலக்கோட்டை மட்டுமல்ல தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 100 நாள் வேலையாட்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தான் என்று பேசப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் 100 நாள் வேலை ஆட்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
காரணம் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்க வேண்டி இருப்பதால் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்ட போது தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் தான் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.